Map Graph

ஓசுமான் சாகர் ஏரி

ஐதராபாத்தின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு செயற்கை ஏரி

ஓசுமான் சாகர் ஏரி என்பது மிர் ஓசுமான் அலி கான்-ஐதராபாத்தின் ஏழாவது நவாப்பால் ஐதராபாத்தின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஓர் செயற்கை ஏரியாகும். நகரிலிருந்து மேற்காக 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி, 46 சதுர கி.மீ.பரப்பளவைக் கொண்டது. முசி ஆற்றின் குறுக்காக அணை கட்டப்பட்டுள்ளது. சிறந்த பொழுது போக்குமிடமாக உள்ளது. சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டங்களும் படகு சவாரிக்கான வசதியும் மகிழ்வூட்டுவதற்கான பொழுதுபோக்கு அமைப்புகளும் கொண்டு விளங்குகிறது.

Read article